சுகாதார அமைப்பை பலப்படுத்த பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்


சுகாதார அமைப்பை பலப்படுத்த பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 May 2021 5:18 AM IST (Updated: 6 May 2021 5:18 AM IST)
t-max-icont-min-icon

தற்போதைய சுகாதார அமைப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

கொல்கத்தா, 

மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்-மந்திரியாக தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி நேற்று பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அனைவருக்கும் வெளிப்படையாகவும், காலவரையறை நிர்ணயம் செய்தும், தடுப்பூசி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலியானோருக்கு மம்தா கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில், ‘‘தற்போதைய சுகாதார அமைப்பு பலப்படுத்தப்பட வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

மேலும், “தற்போது கைவசமுள்ள தடுப்பூசிகள் போதாது. 18 வயதானோருக்கு தடுப்பூசி வழங்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது சாத்தியமற்றது. எனவே இப்போது கவனிக்கப்படவேண்டிய முக்கிய பிரச்சினை, தடுப்பூசி வழங்கல்தான்” எனவும் கூறி உள்ளார்.

Next Story