கேரளாவில் வரும் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு: முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவிப்பு


கேரளாவில் வரும் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு: முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 May 2021 11:53 AM IST (Updated: 6 May 2021 11:53 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் வரும் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

திருவனந்தபுரம், 

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 4 லட்சத்தை தாண்டி பதிவாகி உள்ளது. 

நாள்தோறும் கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதனிடையே இன்று முதல் தமிழகத்தில் வரும் 20-ஆம் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கேரளாவில் வரும் 8-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.  

கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக, தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து நாளை மறுநாள் காலை 6 மணி முதல் மே 16-ம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்பட உள்ளதாக கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

Next Story