பீகாரில் பணிநேரத்தில் கொரோனா வார்டில் இல்லாத 17 டாக்டர்கள்; விளக்கம் அளிக்க உத்தரவு
பீகாரில் பணிநேரத்தில் கொரோனா சிகிச்சை வார்டில் இல்லாத 17 டாக்டர்களிடம் விளக்கம் கேட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பாட்னா,
பீகாரில் 1.13 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. நாளொன்றுக்கு 3 ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பீகாரின் சப்ரா மாவட்டத்தில் உள்ள சதார் மருத்துவமனையில் பணி நேரத்தில் இருக்க வேண்டிய 17 டாக்டர்கள் மருத்துவமனையில் இல்லாதது தெரிய வந்துள்ளது.
இதுபற்றி 17 டாக்டர்களும் விளக்க கடிதம் ஒன்றை அளிக்க வேண்டும் என தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜனார்த்தன பிரசாத் அவர்களிடம் கேட்டு கொண்டுள்ளார். அவரது அறிவுறுத்தலின்பேரில், பேரிடர் மேலாண் சட்டத்தின் கீழ் 17 டாக்டர்கள் மீதும் எப்.ஐ.ஆர். ஒன்று பதிவு செய்யப்பட உத்தரவிடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story