தேசிய செய்திகள்

டெல்லியில் மேலும் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு - 20 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் + "||" + Coronavirus Update of Delhi On May 6

டெல்லியில் மேலும் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு - 20 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்

டெல்லியில் மேலும் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு - 20 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்
தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு மெல்லமெல்ல குறையத்தொடங்கியுள்ளது. அந்த வகையில், இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை டெல்லி அரசு வெளியிட்டது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 19 ஆயிரத்து 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12 லட்சத்து 73 ஆயிரத்து 35 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 90 ஆயிரத்து 629 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து மேலும் 20 ஆயிரத்து 28 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், டெல்லியில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 64 ஆயிரத்து 8 ஆக அதிகரித்துள்ளது. 

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 335 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தலைநகர் டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 398 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 641 பேருக்கு கொரோனா தொற்று; முதியவர் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 641 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.
2. கேரளாவில் இன்று 12 ஆயிரம் பேருக்கு கொரோனா - 136 பேர் பலி
கேரளாவில் இன்று 12 ஆயிரத்து 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் இன்று 6,162 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று 6 ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. அந்தியூர் பகுதியில் 28 பேருக்கு தொற்று: வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை
அந்தியூர் பகுதியில் 28 பேருக்கு தொற்று உறுதியானதால் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
5. கொரோனா வைரசுக்கு எதிராக அப்தலா தடுப்பூசி 92.28 சதவீதம் செயல்திறன் கொண்டது: கியூபா தகவல்
கியூபாவின் ‘அப்தலா' தடுப்பூசி 92.28 சதவீதம் செயல்திறன் கொண்டதாக பரிசோதனையில் நிரூபணமாகி உள்ளது.