ரெயில் பயணிகள் கொரோனா தொற்றில்லா சான்றிதழ் கொண்டு வருவது கட்டாயம்: மேற்கு வங்காள அரசு அறிவிப்பு


ரெயில் பயணிகள் கொரோனா தொற்றில்லா சான்றிதழ் கொண்டு வருவது கட்டாயம்:  மேற்கு வங்காள அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 7 May 2021 9:10 AM IST (Updated: 7 May 2021 9:10 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்திற்கு ரெயிலில் வரும் பயணிகள் தங்களுடன் கொரோனா தொற்றில்லா சான்றிதழ் கொண்டு வருவது கட்டாயம் என அரசு அறிவித்து உள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது.  இதனை முன்னிட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளது.

இதேபோன்று மாநிலத்திற்கு வருகை தரும் ரெயில் பயணிகள் ரெயிலில் ஏறும்பொழுதும், பயணம் மற்றும் இறங்கும்பொழுதும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

ரெயில் புறப்படுவதற்கு முன் 72 மணிநேரத்திற்குள் கொரோனா தொற்றில்லை என்ற ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை முடிவுக்கான சான்றிதழை தங்களுடன் பயணிகள் கொண்டு வருவது கட்டாயம் என்றும் அரசு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.


Next Story