கர்நாடகாவில் இன்று 48 ஆயிரம் பேருக்கு கொரோனா - 28 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்


கர்நாடகாவில் இன்று 48 ஆயிரம் பேருக்கு கொரோனா - 28 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்
x
தினத்தந்தி 7 May 2021 10:31 PM IST (Updated: 7 May 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் இன்று 48 ஆயிரத்து 781 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. அதன்படி, கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில் மாநிலத்தில் இன்று 48 ஆயிரத்து 781 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 38 ஆயிரத்து 885 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 5 லட்சத்து 36 ஆயிரத்து 641 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து ஒரேநாளில் 28 ஆயிரத்து 623 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கர்நாடகாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 12 லட்சத்து 84 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால், கொரோனா தாக்குதலுக்கு ஒரேநாளில் 592 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கர்நாடகாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 804 ஆக அதிகரித்துள்ளது.

Next Story