இஸ்ரேல் நாட்டில் இருந்து 360 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் இந்தியா வருகை


இஸ்ரேல் நாட்டில் இருந்து 360 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் இந்தியா வருகை
x
தினத்தந்தி 8 May 2021 6:16 AM IST (Updated: 8 May 2021 6:16 AM IST)
t-max-icont-min-icon

இஸ்ரேலில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலமாக 360 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனை சரி செய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் வெளிநாடுகளில் இருந்தும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்ய முன்வந்துள்ளன.

அந்த வகையில் இஸ்ரேல் நாட்டில் இந்திய விமானப்படை விமானம் மூலமாக 360 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 3 ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்சிஜன் ஜெனரேட்டர் ஒவ்வொன்றும் 120 படுக்கைகளுக்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தாம் பக்‌ஷி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் கேபி அஸ்கெனாசி கூறுகையில், இஸ்ரேல் நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வந்த நேரத்தில் இந்தியா மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவி செய்தது போல, தற்போது இந்தியாவிற்கு தேவையான நேரத்தில் இஸ்ரேல் துணை நிற்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story