கொரோனா தடுப்பூசி கொள்கையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு


கொரோனா தடுப்பூசி  கொள்கையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது  -  சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு
x
தினத்தந்தி 10 May 2021 5:57 AM GMT (Updated: 10 May 2021 5:57 AM GMT)

கொரோனா தடுப்பூசி கொள்கையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி

தடுப்பூசி திட்டம், தடுப்பூசி விலை உள்ளிட்டவை குறித்து இன்று சுப்ரீம் கோர்ட்டில்  விசாரணை நடக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், சர்வேதேச அளவிலான பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் திட்டங்கள் முற்றிலுமாக மருத்துவ நிபுணர்களாலும், அறிவியல் பூர்வமான கருத்துக்களாலும் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு குறிப்பிட்டுள்ளது.

அங்கு நீதிமன்ற தலையீட்டுக்கு எந்த இடமும் இல்லை எனவும், அப்படி நடந்தால் எதிர்பார்க்காததும், தேவையற்றதுமான பின்விளைவுகள் நோய் கட்டுப்பாட்டில் ஏற்படும் எனவும் மத்திய அரசு தனது தரப்பு நியாயத்தை தெரிவித்துள்ளது.

Next Story