தேசிய செய்திகள்

உத்தர பிரதேசம், குஜராத், மே.வங்காளம், பஞ்சாப் - மாநில கொரோனா பாதிப்பு நிலவரம் + "||" + West Bengal reports 11,284 new #COVID19 cases, 18,642 recoveries, and 142 deaths today; active cases at 94,898

உத்தர பிரதேசம், குஜராத், மே.வங்காளம், பஞ்சாப் - மாநில கொரோனா பாதிப்பு நிலவரம்

உத்தர பிரதேசம், குஜராத், மே.வங்காளம், பஞ்சாப் - மாநில கொரோனா பாதிப்பு நிலவரம்
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை பரவலின் வேகம் கட்டுக்குள் வந்துள்ளது.
லக்னோ,

நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1908- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 6,713-பேர் குணம் அடைந்த நிலையில் 140-பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் 41,124- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1871- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 5146- பேர் குணம் அடைந்த நிலையில், 25- பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 35,403- ஆக உள்ளது. 

பஞ்சாபில் கடந்த 24 மணி நேரத்தில் 2627- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 127- பேர் உயிரிழந்துள்ள நிலையில் 5371- பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 39,263- ஆக உள்ளது. 

மேற்கு வங்காளத்தில் மேலும் 11,284- பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 18,642- பேர் குணம் அடைந்த நிலையில் 142-பேர் பலியாகியுள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 94 ஆயிரத்துய் 898- ஆக உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரசுக்கு ஒரே நாளில் 220 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,753- பேருக்கு கொரோனா
இந்தியாவில் தொடர்ந்து 37-வது நாளாக தொற்று பாதிப்பவர்கள் எண்ணிக்கையை விட குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
3. பிரேசிலில் மீண்டும் வேகமாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் பிரேசில் கடந்த சில நாட்களாக முதலிடம் வகிக்கிறது.
4. பொள்ளாச்சி பகுதியில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு வாலிபர் பலி
பொள்ளாச்சி பகுதியில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதுடன், வாலிபர் பலியானார்.
5. கொரோனா பாதிப்பு: உலகளவில் 100ல் 43 பேர் லத்தீன் அமெரிக்கர்கள்; அதிர்ச்சி தகவல்
உலக அளவில் கடந்த வாரத்தில் அதிக உயிரிழப்புகளை கொண்ட டாப் 9 நாடுகள் அனைத்தும் லத்தீன் அமெரிக்காவை சார்ந்தவையாகவே உள்ளன.