மாநிலங்களுக்கு இதுவரை 23 கோடி தடுப்பூசி வழங்கப்பட்டு உள்ளது: மத்திய அரசு தகவல்

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 23 கோடி தடுப்பூசி வழங்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்து அவற்றை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
அந்த வகையில் நேற்று காலை வரை 23 கோடியே 11 லட்சத்து 68 ஆயிரத்து 480 டோஸ் தடுப்பூசி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
இதில் வீணானவை உள்பட மொத்தம் 21 கோடியே 22 லட்சத்து 38 ஆயிரத்து 652 டோஸ் தடுப்பூசிகள் நேற்று காலை வரை பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறியுள்ள சுகாதார அமைச்சகம், 1.75 கோடிக்கு மேற்பட்ட டோஸ்கள் இன்னும் மாநிலங்களிடம் கையிருப்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளது. அதேநேரம் மேலும் 2 லட்சத்து 73 ஆயிரத்து 970 டோஸ் தடுப்பூசி விரைவில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் எனவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story