தேசிய செய்திகள்

கர்நாடகாவில் தினசரி கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது + "||" + Karnataka reports 14,304 new #COVID19 cases, 464 deaths, and 29,271 recoveries in the last 24 hours; active cases at 2,98,299

கர்நாடகாவில் தினசரி கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது

கர்நாடகாவில் தினசரி கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது
கர்நாடகாவில் இன்று 14,304 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. 

இந்நிலையில், இன்று கர்நாடகாவில் இன்று 14,304 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,18,735 ஆக அதிகரித்துள்ளது.  

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 464 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29,554 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 29,271 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,90,861 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 2,98,299 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் புதிதாக 1,785 பேருக்கு கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மலேசியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா; 17,045 பேருக்கு பாதிப்பு
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது.
3. தமிழகத்தில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 1,819 பேருக்கு தொற்று!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கர்நாடகாவில் இன்று மேலும் 1,705 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 1,705 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெல்டா வகை கொரோனா ஆதிக்கம்: அமெரிக்காவில் மீண்டும் பாதிப்பு அதிகரிப்பு
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,986- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.