மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தடுப்பூசிகளை அனுப்புவதில்லை : மம்தா பானர்ஜி விமர்சனம்

டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்பது வெறும் புரளி என்று மம்தா பானர்ஜி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
கொல்கத்தா,
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தாண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனவும், ஆகஸ்ட் மாதம் முதல் தினசரி ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.
இந்த நிலையில், இது குறித்து விமர்சனம் செய்துள்ள மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி, “ டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்பது வெறும் புரளி. அடிப்படை தன்மை இல்லாத ஒன்றை மத்திய அரசு கூறுகிறது. மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்புவதில்லை. தடுப்பூசிகளை வாங்கி மாநில அரசுகளுக்கு இலவசமாக மத்திய அரசு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story