இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 22 கோடியை தாண்டியது

இந்தியாவில் 138-வது நாளாக இன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் பல்வேறு பிரிவினருக்கு போடும் பணிகள் தொடங்கியது. குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் என படிப்படியாக பயனாளர்கள் எல்லை விரிவுபடுத்தப்பட்டது.
கடைசியாக கடந்த மே 1-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் மாநில அரசுகளும், தனியார் ஆஸ்பத்திரிகளும் நேரடியாகவே தடுப்பூசியை கொள்முதல் செய்து பயன்படுத்திக்கொள்ளவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அந்தவகையில் இந்தியாவில் தொடக்கம் முதலே தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. நாள்தோறும் லட்சக்கணக்கான பயனாளிகள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். தற்போது கொரோனாவின் 2-வது அலை நாட்டில் வேகமெடுத்திருக்கும் நிலையில், தடுப்பூசியையே பிரதான ஆயுதமாக கருதி மத்திய-மாநில அரசுகள் இந்த பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்தியாவில் தடுப்பூசி போடும் திட்டம் துவங்கி இன்றுடன் 138- நாள்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 22 கோடியை தாண்டியுள்ளது.
Related Tags :
Next Story