சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள்


சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள்
x
தினத்தந்தி 3 Jun 2021 12:24 PM IST (Updated: 3 Jun 2021 1:11 PM IST)
t-max-icont-min-icon

மதிப்பெண் வழங்குவது தொடர்பாக சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மத்திய அரசு 2 வாரத்திற்குள் பதிலளிக்க சிபிஎஸ்இக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா காரணமாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்யக் கோரி மம்தா சர்மா என்ற வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில்  தாக்கல் செய்த மனு விசாரணை ஏ.எம்.கான்வெய்சர், தினேஷ் மகேஸ்வரி அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் தொடர்பாக விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு , சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்களின் நலனில் சமரசம் செய்துகொள்ள முடியாது என்று மத்திய அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ஆஜரான மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், 3 வாரங்களில் அனைத்து விவகாரங்களிலும் விரைந்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

எனினும், சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக குறைந்தபட்சம் 2 வாரங்களில் அனைத்து முடிவுகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு  உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவுகள், மாநிலப் பாடத்திட்ட பிளஸ் 2 தேர்வுகளை ரத்து செய்யும் மாநில அரசுகளுக்கும் வழிகாட்டியாய் அமையும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு  குறிப்பிட்டுள்ளது.

Next Story