கொரோனாவால் உயிரிழந்ததாக அடக்கம் செய்யப்பட்ட பெண் மீண்டும் உயிருடன் வந்தார்

ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்ததாக அடக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.
கிறிஸ்டியான் பேட்டை
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்தவர் கட்டய்யா இவரது மனைவி கிரிஜம்மா ( வயது 75)கொரோனா பாதிப்பு காரணமாக மே 12ஆம் தேதி விஜயவாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவரது கணவர் கடய்யா வீடு திரும்பினார்.
பின்னர் மே 15 ஆம் தேதி கட்டயா தனது மனைவியை பார்க்க மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால் கிரிஜம்மா அவர்து படுக்கையில் இருந்து காணவில்லை, மருத்துவமனை ஊழியர்கள் அவரை வேறு வார்டுக்கு மாற்றியிருக்கலாம் என்று கூறினர்.
மருத்துவமனையில் உள்ள அனைத்து வார்டுகளையும் முழுமையாக சுற்றி வந்த பிறகும் கிரிஜம்மாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை இறுதியாக, மருத்துவமனை ஊழியர்கள் கடய்யாவிடம் ரேத அறைக்கு சென்று பார்க்குமாறு கூறினார்கள். அவர் அங்கு சென்றபோது, அவர் தனது மனைவியைப் போன்ற ஒரு உடலை காட்டினார். 15ஆம் தேதி இருந்து அவரது உடல் உறவினர்களிடையே ஒப்படைக்கப்பட்டது.மருத்துவ சான்றிதழும் வழங்கபட்டது.
இதனிடையே கிரிஜம்மாவின் மகன் ரமேஷும் மே 23 கொரோனாவால் உயிரிழந்ததால் இருவரின் உடல்களும் நல்லடக்கம் செய்யப்பட்டது. 10 நாட்களுக்கு பின் கிரிஜம்மாவின் வீட்டில் இறுதி சடங்கி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு கிரிஜம்மா உயிருடன் வந்ததால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதற்கிடையில், மருத்துவமனையில் இருந்த கிரிஜம்மா குணமடைந்து. தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்ல யாரும் ஏன் வரவில்லை என்று அவர் ஆச்சரியப்பட்டார். உடனடியாக வீடு திரும்பி உள்ளார்.
பிறகுதான் தாங்கள் இறுதி சடங்கு நடத்தியது வேறு ஒரு பெண்ணின் உடல் என தெரியவந்தது. அடக்கம் செய்யப்பட்டவர் யார் என விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story