நாட்டில் கடந்த மே மாதத்தில் உணவு தானியம் பெற்ற பயனாளர்கள் எண்ணிக்கை 55 கோடி

நாட்டில் கடந்த மே மாதத்தில் 55 கோடி பயனாளர்கள் உணவு தானியங்களை பெற்றுள்ளனர் என உணவு மற்றும் பொது வினியோக செயலாளர் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா (பி.எம்.ஜி.கே.ஏ.ஒய்.) 3வது கட்ட திட்டம் பற்றி உணவு மற்றும் பொது வினியோக துறையின் செயலாளர் சுதான்சு பாண்டே இன்று கூறும்பொழுது, இந்திய உணவு கழக கிடங்குகளில் இருந்து 63.67 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் எடுத்து சென்றுள்ளன.
இது மே மற்றும் ஜூன் மாதத்திற்கான பி.எம்.ஜி.கே.ஏ.ஒய். திட்ட ஒதுக்கீட்டில் 80 சதவீதம் ஆகும். ஏறக்குறைய 28 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 55 கோடி தேசிய உணவு பாதுகாப்பு சட்ட பயனாளிகளுக்கு கடந்த மே மாதத்தில் வழங்கியுள்ளது.
இதேபோன்று நடப்பு ஜூன் மாதத்தில் 2.6 கோடி பயனாளிகளுக்கு 1.3 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளார். இதற்காக மொத்தம் ரூ.13 ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக உணவு மானியம் செலவிடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story