ஜூன் 5-9 ஆம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகள்; கேரள அரசு அறிவிப்பு

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 15.22 சதவிகிதமாக உள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதத்தை குறைக்கும் நோக்கில் வரும் ஜூன் 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் இந்த நாட்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்படும். 50 தொழிலாளர்களுடன் தொழிற்சாலைகளும் இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் 10 ஆம் தேதி முதல் அரசு மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 15.22 சதவிகிதமாக உள்ளது. அதேபோல் புதிதாக தொற்றுபாதிப்புக்க்கு உள்ளானோர் எண்ணிக்கை 18,853-ஆக உள்ளது. மாநிலத்திலேயே மலப்புரம் மாவட்டத்தில்தான் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது.
மலப்புரத்தில் மட்டும் 2,400- பேர் கொரோனாவால் நேற்று ஒருநாளில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடைகளும் இயங்கலாம். 50 தொழிலாளர்களுடன் தொழிற்சாலைகளும் இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story