ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ்


ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ்
x
தினத்தந்தி 4 Jun 2021 6:21 AM GMT (Updated: 4 Jun 2021 9:10 AM GMT)

'ரெப்போ ரேட்' எனும் வங்கிகளுக்கான குறுகியகால கடனுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் ஏதுமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

மும்பை,

ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ் தெரிவித்துள்ளார். மேலும், ந்ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் மாற்றமின்றி 3.35 சதவீதம் என்ற அளவிலேயே தொடரும், இதனால் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்றும் ஆளுநர் சக்தி கந்ததாஸ் கூறியுள்ளார். 

மேலும், இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக, இந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 9.5 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. முன்னதாக, 10.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டது.

ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். ரெப்போ ரேட் குறையும்போது, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும்.

Next Story