மராட்டியத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை 476 பேர் உயிரிழப்பு


மராட்டியத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை 476 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 4 Jun 2021 4:57 PM IST (Updated: 4 Jun 2021 4:57 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை 476 பேர் உயிரிழந்து உள்ளனர் என மாநில சுகாதார துறை தெரிவித்து உள்ளது.

புனே,

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.  கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களுக்கு, அதன் தொடர்ச்சியாக கருப்பு பூஞ்சை நோய் தொற்றும் ஏற்பட்டு வருகிறது.  இதனால், மக்கள் அதற்கும் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

கொரோனா சிகிச்சைக்கு ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட கூடிய சாத்தியம் அதிகமுள்ளது என கூறப்படுகிறது.  நாட்டின் பல பகுதிகளில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு காணப்படுகிறது.

இதனை முன்னிட்டு ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழகம், ஒடிசா, குஜராத், பஞ்சாப், அரியானா, கர்நாடகா, பீகார் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இதனை தொற்று நோய் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட தொற்று நோயாக அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் 8,000க்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய் பாதிப்பு காணப்படுகிறது.  இதனை கட்டுக்குள் கொண்டு வர அரசும் முயற்சி எடுத்து வருகிறது.  இந்நிலையில், மராட்டியத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை 476 பேர் உயிரிழந்து உள்ளனர் என மாநில சுகாதார துறை தெரிவித்து உள்ளது.  இதேபோன்று, 5,763 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளது.


Next Story