மலைக்கிராம மக்களுக்காக ஆற்றை கடந்து கொரோனா தடுப்பூசி கொண்டு சென்ற சுகாதாரத்துறை ஊழியர்கள்

காஷ்மீரின் மலைக்கிராமத்தில் வசிப்பவர்களுக்காக சுகாதாரத்துறை ஊழியர்கள் ஆற்றில் இறங்கி அதை கடந்து கொரோனா தடுப்பூசி கொண்டு சென்றனர்.
ஸ்ரீநகர்,
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாலை, போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சுகாதாரத்துறையினர் கொரோனா தடுப்பூசிகளை கொண்டு சேர்த்து வருகின்றனர்.
அந்த வகையில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ரஜோரி மாவட்டத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்திற்கு ஆற்றை கடந்து 2 பெண்கள் உள்பட 3 சுகாதார ஊழியர்கள் நேற்று கொரோனா தடுப்பூசி கொண்டு சென்றனர்.
மலைப்பகுதியில் உள்ள அந்த கிராமத்தை அடைய ஆற்றில் இறங்கி அதை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை ஊழியர்கள் 3 பேரும் வேகமாக பாயும் ஆற்றில் இறங்கி அதை கடந்து பாதுகாப்பாக மலைக்கிராமத்திற்கு சென்றனர். அங்குள்ள மக்களுக்கு சுகாதாரத்துறையினர் கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.
#WATCH Health workers cross a river to reach a remote area of Kandi block in Rajouri to conduct COVID19 vaccination drive#JammuAndKashmirpic.twitter.com/9x2CH6ogb6
— ANI (@ANI) June 4, 2021
Related Tags :
Next Story