அதிகளவில் தடுப்பூசி கிடைப்பதை உறுதிசெய்ய மத்திய அரசு அவகாசம் கேட்கிறது


அதிகளவில் தடுப்பூசி கிடைப்பதை உறுதிசெய்ய மத்திய அரசு அவகாசம் கேட்கிறது
x
தினத்தந்தி 5 Jun 2021 4:44 AM IST (Updated: 5 Jun 2021 4:44 AM IST)
t-max-icont-min-icon

பல மாநிலங்களில் ஊரடங்கு பொதுமுடக்கங்கள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பின்பற்றப்படுவதால் தொற்று பாதிப்பும், உயிர்ப்பலிகளும் குறைந்து வருகிறது.

புதுடெல்லி, 

கொரோனாவின் முதல் அலையை எளிதாக கடந்து வந்து விட்ட இந்தியா, இரண்டாவது அலையை வீழ்த்துவதற்காக நீண்டதொரு போராட்டத்தை நடத்தி வருகிறது. பல மாநிலங்களில் ஊரடங்கு பொதுமுடக்கங்கள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பின்பற்றப்படுவதால் தொற்று பாதிப்பும், உயிர்ப்பலிகளும் குறைந்து வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசு தரப்பில்  கூறியதாவது:-

கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும், கொரோனா தொற்றுக்கு எதிரான பொருத்தமான நடத்தையும், தடுப்பூசி போடும் வேகமும் குறையுமானால் வைரஸ் பாதிப்பு உயரக்கூடும்.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு உலக சுகாதார நிறுவனத்துக்கு தரவுகள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியா அதைத்தொடர்ந்து கவனித்து வருகிறது. கூடிய விரைவில் அந்த அங்கீகாரத்தை அடையவும் விரும்புகிறது.

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி அதிகளவில் கிடைப்பதை உறுதி செய்ய அரசுக்கு கொஞ்சம் கால அவகாசம் வேண்டும்.

இதுவரையில் 60 வயதுக்கு மேற்பட்ட மக்களில் ஏறத்தாழ 43 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 45 வயதுக்கு அதிகமானோரில் 37 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

இவ்வாறு மத்திய அரசு கூறி உள்ளது.

Next Story