டெல்லியில் திங்கள் கிழமை முதல் மெட்ரோ ரெயில்கள் 50% பயணிகளுடன் இயங்க அனுமதி

டெல்லியில் கொரோனா தொற்று பரவல் குறையத்தொடங்கியுள்ளது.இதையடுத்து, ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையின் தீவிரம் தணியத்தொடங்கியிருக்கிறது. இதனால், பல்வேறு மாநிலங்களும் படிப்படியாக தளர்வுகளை அறிவிக்கத்தொடங்கியுள்ளது.
அந்த வகையில் நாட்டின் தலைநகர் டெல்லியில் வரும் திங்கள் கிழமை முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன்படி, டெல்லி சந்தைகள், வணிக வளாகங்கள் ஒற்றப்படை- இரட்டைப்படை எண்கள் அடிப்படையில் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
அதேபோல், மெட்ரோ ரெயில்களும் 50 சதவீத பயணிகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும், தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம். அரசு அலுவலகங்களில் குரூப்-ஏ பிரிவு ஊழியர்கள் 100 சதவீதம் வருகை தர வேண்டும். குரூப் -பி பிரிவு ஊழியர்கள் 50 சதவீதத்தினர் வருகை தரவேண்டும்” என்றார்.
Related Tags :
Next Story