ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் டுவிட்டர் கணக்கில் இருந்த புளு டிக் நீக்கம்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் டுவிட்டர் கணக்கில் இருந்த புளு டிக் வசதி நீக்கப்பட்டுள்ளது.
மும்பை,
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் டுவிட்டர் கணக்குக்கு வழங்கப்பட்டு இருந்த புளு டிக் வசதியை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. மோகன் பகவத்தை டுவிட்டரில் 20.76 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். அதேபோல், சுரேஷ் சோனி, அருண் குமார், சுரேஷ் ஜோஷி மற்றும் கிருஷ்ண குமார் ஆகியோரின் புளு டிக் வசதியை டுவிட்டர் நிறுவனம் நீக்கியதாக கூறப்படுகிறது.
முன்னதாக இன்று காலை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் டுவிட்டர் கணக்கு புளு டிக் வசதி நீக்கப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு செயல்பாடுகள் எதுவும் இல்லாமல் இருந்ததால் புளு டிக் வசதி நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. எனினும், சிறிது நேரத்தில் வெங்கையா நாயுடுவின் டுவிட்டர் பக்கத்திற்கு புளு டிக் வசதியை மீண்டும் டுவிட்டர் நிறுவனம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
சம்பந்தப்பட்ட நபரின் கணக்கு இதுதான் என்பதை உறுதி செய்யும் வகையில் புளு டிக் வசதி டுவிட்டரால் வழங்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story