பொருளாதாரமும் சுற்றுச்சூழலும் ஒன்றாக செல்ல முடியும். இதுதான் இந்தியா தேர்ந்தெடுத்த பாதை- பிரதமர் மோடி


பொருளாதாரமும் சுற்றுச்சூழலும் ஒன்றாக செல்ல முடியும். இதுதான் இந்தியா தேர்ந்தெடுத்த பாதை- பிரதமர் மோடி
x
தினத்தந்தி 5 Jun 2021 5:03 PM IST (Updated: 5 Jun 2021 5:19 PM IST)
t-max-icont-min-icon

பொருளாதாரமும் சுற்றுச்சூழலும் ஒன்றாகச் செல்ல முடியும். இதுதான் இந்தியா தேர்ந்தெடுத்த பாதை என்று பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி: 

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு எத்தனால் சாலை வரைபடத்தை அறிமுகப்படுத்தியதில் பேசிய மோடி, 2025 முதல்   2030 அவரி 5 ஆண்டுகள் பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கும் இலக்கு முன்வைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது;-

மாசுபாட்டைக் குறைப்பதற்கும் இறக்குமதி சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலப்பதை இலக்காக அடைய  2025 முதல் 5 ஆண்டுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தார்.

கரும்பிலிருந்து எடுக்கப்படும் எத்தனால் மற்றும் சேதமடைந்த உணவு தானியங்களான கோதுமை மற்றும் உடைந்த அரிசி மற்றும் விவசாய கழிவுகள் மூலம் எடுக்கபடும் எத்தனாவால் குறைவாக  மாசுபடுகின்றன, மேலும் இதன் பயன்பாடு விவசாயிகளுக்கு மாற்று வருமான ஆதாரத்தையும் வழங்குகிறது.

கடந்த ஆண்டு, 2022 ஆம் ஆண்டில் பெட்ரோலில் 10 சதவிகிதம் எத்தனால் கலப்பதை (10 சதவிகிதம் எத்தனால் 90 சதவிகித டீசலுடன் கலக்க வேண்டும்) மற்றும் 2030 ஆம் ஆண்டில் 20 சதவிகிதம் ஊக்கமளிக்கும் இலக்கை அரசாங்கம் நிர்ணயித்திருந்தது.

தற்போது, ​​சுமார் 8.5 சதவீதம் எத்தனால் பெட்ரோலுடன் கலக்கப்படுகிறது, இது 2014 ல் 1-1.5 சதவீதமாக இருந்தது, எத்தனால் கொள்முதல் 38 கோடி லிட்டரிலிருந்து 320 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு எண்ணெய் நிறுவனங்கள் எத்தனால் கொள்முதல் செய்வதற்காக ரூ .21,000 கோடியை செலவிட்டன.

சுற்றுச்சூழலுக்கு உதவுவதோடு, எத்தனால் மீது கவனம் செலுத்துவதும் விவசாயிகளின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 250 சதவீதம் உயர்ந்துள்ளது. இப்போது நிறுவப்பட்ட மிகப்பெரிய திறன் கொண்ட முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் உள்ளது. இந்தியா இப்போது காலநிலை மாற்றத் தீர்மானத்தின் ஆதரவாளராகவும், காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டில் முதல் 10 நாடுகளில் ஒன்றாகும்.

"பொருளாதாரமும் சுற்றுச்சூழலும் ஒன்றாகச் செல்ல முடியும். இதுதான் இந்தியா தேர்ந்தெடுத்த பாதை" என்று பிரதமர் மோடி  கூறினார்.

Next Story