மோடி அரசு அகம்பாவத்தை கைவிட்டு வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும் காங்கிரஸ் வேண்டுகோள்

மோடி அரசு அகம்பாவத்தை கைவிட்டு வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும் காங்கிரஸ் வேண்டுகோள்
புதுடெல்லி,
புதிய வேளாண் சட்டங்களை அவசர சட்டங்களாக பிறப்பித்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், மோடி அரசு ஈகோவை கைவிட்டு இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்து உள்ளது.
இந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என பிரதமர் மோடி கூறிய நிலையில், பதுக்கல், கார்ப்பரேட் நண்பர்களுக்காக கள்ளச்சந்தை விற்பனை போன்றவற்றுக்கான வாய்ப்புகள்தான் பெருகியிருப்பதாக கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா குற்றம் சாட்டினார்.
அதேநேரம் விவசாயிகளுக்கு தடியடி, கண்ணீர் புகை குண்டுவீச்சு போன்ற அடக்குமுறைகள்தான் கிடைத்திருப்பதாகவும், அன்னதான பிரபுக்களான அவர்களை ஒப்பந்த தொழிலாளர்களாக மாற்றியிருப்பதாகவும் அவர் கூறினார்.
Related Tags :
Next Story