கொரோனா தடுப்பூசி மையத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய பாஜக தலைவி

விதிகளை மீறி பாஜக தலைவி கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
இந்தூர்,
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த பாஜக தலைவி மதூரி ஜெய்ஷ்வால். இவருக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். இதை அவர் கொரோனா தடுப்பூசி மையத்தில் கொண்டாடியுள்ளார்.
இந்தூரில் உள்ள கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற மதூரி ஜெய்ஷ்வால் அங்கு கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் தடுப்பூசி செலுத்தும் மையத்தில் அவர் தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்.
தடுப்பூசி மையத்தில் பாஜக தலைவி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. பலர் மதூரியின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
சமூகவலைதளத்தில் விமர்சனம் எழுந்ததையடுத்து மதூரி தனது செயலுக்கு மன்னிப்புக்கோரியுள்ளார். இது தொடர்பாக, மதூரி கூறுகையில், மகிழ்ச்சியின் உச்சத்தால் எங்கள் கட்சி தொண்டர்கள் எனது பிறந்தநாளை கொண்டாடிவிட்டனர். இந்த செயலுக்காக எனது வார்டு மக்களிடம் நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.
Related Tags :
Next Story