இந்தியாவில் சிறு, குறு தொழில் துறையை புனரமைக்க உலக வங்கி ரூ.3,641 கோடி கடன்


இந்தியாவில் சிறு, குறு தொழில் துறையை புனரமைக்க உலக வங்கி ரூ.3,641 கோடி கடன்
x
தினத்தந்தி 7 Jun 2021 4:19 PM IST (Updated: 7 Jun 2021 4:19 PM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையை புனரமைப்பதற்காக உலக வங்கி ரூ.3,641 கோடி கடன் வழங்க முன்வந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு நாடு முழுவதும் ஊரடங்கு அமலானது.  இதனால், தொழில்கள் முடங்கின.  நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தின.  பலருக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.

நாட்டில் பொருளாதார தேக்கம் ஏற்பட்டது.  இந்நிலையில், கொரோனா 2வது அலையில், முதல் அலையை விட தீவிர பாதிப்புகள் ஏற்பட்டன.  இதனால் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டன.

சமீப நாட்களாக நாட்டில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது.  இந்நிலையில், இந்திய பொருளாதாரத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதமும், ஏற்றுமதியில் 40 சதவீதமும் பங்கு வகிக்க கூடிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை (எம்.எஸ்.எம்.இ. பிரிவு) ஊக்குவிக்கும் வகையில் உலக வங்கி கடன் வழங்க முன்வந்துள்ளது.

இதன்படி, நாடு முழுவதும் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையை புனரமைப்பதற்காக உலக வங்கி சார்பில் ரூ.3,641 கோடி கடன் வழங்கப்படும்.  இந்தியாவில் முறையான நிதி வசதியின்றி 40 சதவீத தொழில் நிறுவனங்கள் உள்ளன.  அவை பயன்பெறும் வகையில் இந்த கடனுதவி வழங்கப்படுகிறது.


Next Story