கேரளாவில் வரும் 16ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; வாரநாட்களில் முழு ஊரடங்கு


கேரளாவில் வரும் 16ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; வாரநாட்களில் முழு ஊரடங்கு
x
தினத்தந்தி 7 Jun 2021 6:57 PM IST (Updated: 7 Jun 2021 6:57 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் வரும் 16ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. வருகிற சனி, ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் கொரோனா முதல் அலையை விட 2வது அலை மிக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.  இதனால் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டன.

இதேபோன்று, கேரளாவிலும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.  இந்நிலையில், மாநிலத்தில் ஊரடங்கு வருகிற 16ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என கேரள முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்து உள்ளது.

இந்த ஊரடங்கில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், தொழிற்சாலைகளுக்கான உற்பத்தி சார்ந்த பொருட்கள், கட்டுமான பொருட்கள் மற்றும் வங்கிகள் ஆகியவை தற்போது உள்ள நடைமுறையிலேயே இயங்கும்.

எனினும், வருகிற சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கேரளாவில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story