மேற்கு வங்காளத்தில் மின்னல் தாக்கி 26 பேர் பலி

மேற்கு வங்காளத்தில் மின்னல் தாக்கியதில் இன்று ஒரே நாளில் 26 பேர் பலியாகி உள்ளனர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் கடந்த மே மாத இறுதியில் யாஸ் புயல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பகுதிகளில் வசித்து வந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இதேபோன்று, ரெயில், விமான போக்குவரத்து சேவைகளும் தற்காலிக ரத்து செய்யப்பட்டன. இந்த புயல் பாதிப்பில் இருந்து இயல்பு வாழ்க்கைக்கு முழுமையாக திரும்ப மக்கள் முயன்று வருகின்றனர்.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மின்னல் தாக்கியதில் 26 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் மிக அதிக அளவாக ஹூக்ளி நகரில் 11 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இதேபோன்று, மூர்ஷிதாபாத் நகரில் மின்னல் பாதிப்புக்கு 9 பேர் பலியாகி உள்ளனர். பங்குரா, கிழக்கு மிட்னாப்பூர் மற்றும் மிட்னாப்பூர் ஆகிய நகரங்களில் தலா 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.
Related Tags :
Next Story