பிரஃபுல் பட்டேலை திரும்ப பெறக்கோரி லட்சத்தீவு மக்கள் உண்ணாவிரத போராட்டம்

லட்சத்தீவு நிர்வாகி பிரஃபுல் பட்டேலை திரும்ப பெறக்கோரி அங்குள்ள மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கவரத்தி,
நாட்டின் மிகச்சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவின் நிர்வாகியாக பிரஃபுல் பட்டேல் என்பவரை மத்திய அரசு சமீபத்தில் நியமித்தது. அவரது நியமனத்திற்கு பிறகு சீர்திருத்தம் என்ற பெயரில் மாட்டு இறைச்சிக்கு தடை விதித்தது, மதுபான கூடங்களுக்கு அனுமதி வழங்கியது, பள்ளிகளில் இறைச்சிக்கு தடை விதித்தது என அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
அவரது நடவடிக்கைகள் லட்சத்தீவு மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரஃபுல் பட்டேலை திரும்ப பெறக்கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி லட்சத்தீவு மக்களில் பெரும்பாலானோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் வீடுகளில் இருந்தவாறு 12 மணி நேரம் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story