டெல்லியில் தடுப்பூசி போடும் பணி மும்முரம்: அரவிந்த் கெஜ்ரிவால் ஆய்வு


டெல்லியில் தடுப்பூசி போடும் பணி மும்முரம்: அரவிந்த் கெஜ்ரிவால் ஆய்வு
x
தினத்தந்தி 9 Jun 2021 3:29 PM IST (Updated: 9 Jun 2021 3:29 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் கொரோனா தடுப்பூசி மையங்களை முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா ஆகியோர் பார்வையிட்டனர்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. 

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா இரண்டாம் அலையால் மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றன. தலைநகரான டெல்லியில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும் தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென சிறப்புக் குழுவை ஏற்படுத்தி அதன் மூலம் மக்களிடம் கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து தடுப்பூசி பணி போடப்பட்டு வருகிறது.

இதனிடையே கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை ஆய்வு செய்யும் விதமாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்-மந்திரி சிசோடியா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

டெல்லியில் 'ஜஹான் வாட் வாகன் தடுப்பூசி' என்ற புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அதிக எண்ணிக்கையில் வரவில்லை, எனவே அவர்கள் அழைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அதற்காகவே இது தொடங்கப்பட்டது, மக்கள் வாக்களிக்கும் இடத்தில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வாக்குச் சாவடிகள் தடுப்பூசி மையங்களாக மாறி உள்ளது என்றார்.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 316 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Story