ரெயில்வே துறையில் 5ஜி இணையதள சேவை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரெயில்வே துறையை நவீனமாக்க அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.25 ஆயிரம் கோடி செலவிடப்படும் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
புதுடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் ரெயில்வே துறையில் 5ஜி இணையதள சேவையை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ரெயில் நிலையங்கள், ரெயில் சேவை மற்றும் மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பயன்பாட்டிற்காக புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை அடுத்த 5 ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






