ரூ.466 கோடி மோசடி: அவந்தா குழுமத் தலைவர் கவுதம் தாபர் மீது சிபிஐ வழக்குப் பதிவு


ரூ.466 கோடி மோசடி: அவந்தா குழுமத் தலைவர் கவுதம் தாபர் மீது சிபிஐ வழக்குப் பதிவு
x
தினத்தந்தி 9 Jun 2021 5:11 PM IST (Updated: 9 Jun 2021 5:11 PM IST)
t-max-icont-min-icon

466 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறி அவந்தா குழுமத் தலைவர் கவுதம் தாபர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

புதுடெல்லி

எஸ் வங்கியில் கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாமல் 466 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறி அவந்தா குழுமத் தலைவர் கவுதம் தாபர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

கவுதம் தாப்பரின் கட்டுமான நிறுவனம் எஸ் வங்கியில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாத நிலையில், ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்புள்ள கடனை நீட்டிக்க எஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் லஞ்சம் பெற்றதாக கடந்த ஆண்டு மார்ச்சில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

தாபரின் வளாகம் உட்பட சுமார் 20 இடங்களில் சிபிஐ சோதனை செய்து ஆவணங்களை கைபற்றியது

கடன் நீட்டிப்புக்குக் கைமாறாக டெல்லியில் ஒன்றேகால் ஏக்கர் பரப்பில் உள்ள பெரிய பங்களாவைச் சந்தை மதிப்பை விடப் பாதி விலைக்கு ராணா கபூருக்குக் கவுதம் தாப்பர் விற்றது விசாரணையில் தெரியவந்தது.

இந்த வகையில் 307 கோடி ரூபாயை ராணா கபூருக்கு லஞ்சமாகக் கவுதம் தாப்பர் வழங்கியதாகவும், கடன் நீட்டிப்பின்மூலம் எஸ் வங்கிக்கு 466 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது.

Next Story