அசாமில் புதிதாக 3,751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


அசாமில் புதிதாக 3,751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 9 Jun 2021 11:55 PM IST (Updated: 9 Jun 2021 11:55 PM IST)
t-max-icont-min-icon

அசாமில் புதிதாக 3,751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கவுகாத்தி, 

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கொரோனா தொற்று வரைஸ் அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி, அசாம் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலத்தில் ஒரேநாளில் 3,751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,46,445 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 55 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,793 ஆக அதிகரித்துள்ளது.

அசாமில் இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 4,355 பேர் கொரோனாதொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,92,806 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது வரை மாநிலத்தில் 48,499 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது


Next Story