புதிய ஐடி விதிகள்; மத்திய அரசுக்கு டுவிட்டர் நிறுவனம் கடிதம்

டுவிட்டர் நிறுவனத்துக்கு இறுதி எச்சரிக்கை அளிக்கும் விதமாக மத்திய அரசு கடந்த 5-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
புதுடெல்லி,
' பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்- ஆப், இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில், மத்திய அரசு, கடந்த பிப்ரவரி மாதம், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை அறிமுகப்படுத்தியது. புதிய விதிகளில், 'புகார்கள் குறித்து விசாரிக்க, இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்' என்பது உட்பட, பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
புதிய விதிகளுக்கு இணங்கி பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட நிறுவனங்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டன. எனினும் டுவிட்டா் நிறுவனம் மட்டும் புதிய விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. இந்நிலையில், அந்த நிறுவனத்துக்கு இறுதி எச்சரிக்கை அளிக்கும் விதமாக மத்திய அரசு கடந்த 5-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதையடுத்து டுவிட்டா் நிறுவனம் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், 'சிறப்பு தொடா்பு அதிகாரி மற்றும் உள்நாட்டு குறைதீா் அதிகாரியை ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமித்துள்ளோம். அந்த பொறுப்புகளுக்கான நிரந்தர நியமனம் மேற்கொள்ளப்படும். அதேபோல், தலைமை சட்ட இணக்க அதிகாரியை நியமனம் செய்வதற்கான இறுதி கட்டத்தில் உள்ளோம். இவை தொடா்பான கூடுதல் தகவல்களை அடுத்த சில நாள்களில் அரசுக்கு சமா்ப்பிப்போம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story