சீன செல்போன் செயலிகள் மூலம் 5 லட்சம் இந்தியர்களிடம் ரூ.150 கோடி மோசடி; 10 பேர் கைது

சீனாவில் இருந்து, செல்போன் செயலிகள் மூலம், 2 மாதத்தில் 5 லட்சம் இந்தியர்களிடமிருந்து 150 கோடி ரூபாய் சுருட்டிய கும்பலை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி
ஆன்லைன் மல்ட்டிலெவல் மார்க்கெட்டிங் என்ற பெயரில், உடனடி வருவாய், இரு மடங்கு ஆதாயம் என ஆசைகாட்டி இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த பவர் பேங்க் , இஇசட் பிளான்,சன் பேக்டரி . லைட்டிங் பவர் பேங்க் உள்ளிட்ட செயலிகளை நம்பி, 300 ரூபாயில் இருந்து பல லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.
அதிலும் பவர் பேங்க்ஆப், கூகுள் பிளே ஸ்டோரில், டிரென்டிங்கில் 4ஆம் இடத்திற்கும் வந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பவர் பேங்க், இஇசட் பிளான் குறித்து பரப்பப்பட்டதால் டெல்லி சைபர் கிரைம் போலீசார் அதுபற்றி ஆய்வு நடத்தியபோது, சீனாவை சேர்ந்த சர்வரில் இருந்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி மூலம் திரட்டப்பட்ட பணத்தை, சீனாவை சேர்ந்த மோசடி பேர்வழிகளுக்கு அனுப்ப, நூற்றுக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் பெயரில் வங்கிக் கணக்குகளும் செயல்பட்டுள்ளன.
இதற்கு உடந்தையாக இருந்த 2 சார்ட்டடு அக்கவுன்டன்டுகள், ஒரு திபெத்திய பெண் உள்ளிட்ட 10 பேரை கைது செய்துள்ள போலீசார், வங்கிக் கணக்குகளில் 11 கோடி ரூபாயை முடக்கியுள்ளனர்.
Related Tags :
Next Story