டெல்லியில் அமித் ஷாவுடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்தார்.
புதுடெல்லி,
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன. இதனிடையே மூத்த தலைவர் ஜிதின் பிரசாதா காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
இந்த நிலையில் 2 நாள் பயணமாக யோகி ஆதித்யநாத் டெல்லி வந்தடைந்தார். இதைத் தொடர்ந்து, இன்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து நாளை பிரதமர் மோடியைச் சந்தித்து அவர் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story






