தேசிய செய்திகள்

பா.ஜ.க. வெற்றிக்கு பிரதமர் மோடியின் தலைமைத்துவமே காரணம்: சிவசேனா எம்.பி. + "||" + PM Modi's leadership is the reason for the BJP victory: Shiv Sena MP

பா.ஜ.க. வெற்றிக்கு பிரதமர் மோடியின் தலைமைத்துவமே காரணம்: சிவசேனா எம்.பி.

பா.ஜ.க. வெற்றிக்கு பிரதமர் மோடியின் தலைமைத்துவமே காரணம்:  சிவசேனா எம்.பி.
பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தினாலேயே பா.ஜ.க. வெற்றி பெறுகிறது என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
மும்பை,

மராட்டியத்தில் முதல் மந்திரியாக உள்ள உத்தவ் தாக்கரே, டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன் அவரை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்புக்கு பின், மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் பற்றி மத்திய அரசு முக்கிய முடிவுகளை எடுக்கும் என உத்தவ் தாக்கரே கூறினார்.

இந்நிலையில், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, பிரதமர் மோடி நாட்டின் மற்றும் பா.ஜ.க.வின் தலை சிறந்த தலைவர் என நான் நம்புகிறேன்.  கடந்த 7 ஆண்டுகளில் அக்கட்சி பெற்ற வெற்றியானது பிரதமர் மோடியால் மட்டுமே என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

முன்னாள் பா.ஜ.க. தலைவர் வாஜ்பாய் பதவி காலத்தில் கூட, மராட்டியத்தில் தேர்தல் நடந்தபொழுது, பாலாசாஹேப் தாக்கரேவின் புகைப்படங்கள் தேர்தல் பிரசாரத்திற்கு போஸ்டர்களில் பயன்படுத்தப்பட்டன என கூறியுள்ளார்.

மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியுடன் சிவசேனா ஆட்சி செய்து வருகிறது.  இந்நிலையில், முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிவிட்டு வந்த பின்னர் சஞ்சய் ராவத் அளித்துள்ள பேட்டியில் பிரதமரை புகழும் வகையில் பேசியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர தயார்: தமிழக பா.ஜ.க. தலைவர் பேட்டி
பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு தயாராக உள்ளது என தமிழக பா.ஜ.க. தலைவர் பேட்டியில் கூறியுள்ளார்.
2. அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. தலையிடவில்லை; தமிழக பா.ஜ.க. தலைவர் பேட்டி
அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. தலையிடவில்லை என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேட்டியில் கூறியுள்ளார்.
3. உருமாறும் கொரோனாவால் 3வது பூஸ்டர் டோஸ் தேவையா? டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் பேட்டி
உருமாறும் கொரோனாவால் 3வது பூஸ்டர் டோஸ் அளிக்க வேண்டிய தேவை ஏற்பட கூடும் என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் கூறியுள்ளார்.
4. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி
உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 350க்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றும் என மத்திய இணை மந்திரி பேட்டியில் கூறியுள்ளார்.
5. தமிழகத்தில் 2,01,54,901 தடுப்பூசிகள் இதுவரை போடப்பட்டு உள்ளன; அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி
தமிழகத்தில் 2,01,54,901 தடுப்பூசிகள் இதுவரை போடப்பட்டு உள்ளன என அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டியில் கூறியுள்ளார்.