வருகிற 26 ந்தேதி நாடு முழுவதும் கவர்னர் மாளிகை முன்பு கறுப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்


வருகிற 26 ந்தேதி  நாடு முழுவதும் கவர்னர் மாளிகை முன்பு கறுப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2021 4:02 PM IST (Updated: 12 Jun 2021 4:02 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி போராட்டம் 7 மாதங்கள் நிறைவடைவதையொட்டி 26 ந்தேதி நாடு முழுவதும் கவர்னர் மாளிகை முன்பு கறுப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளனர்.

புதுடெல்லி : 

 மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம்  நடத்தி வருகிறார்கள். முக்கியமாக பஞ்சாப், அரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில் ஆறு மாதங்களுக்கும் மேலாக முகாமிட்டுள்ளனர்.

விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி வரும் 26ம் தேதியுடன்  7 மாதங்கள் நிறைவடைகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள மாநில கவர்னர்  மாளிகை முன்பு கறுப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற 40 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பு இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ஜனாதிபதிக்கு  கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அனுப்ப உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா  தலைவர் இந்தர்ஜித் சிங் கூறும் போது விவசாயத்தை காப்பாற்றுங்கள், ஜனநாயக தினத்தை காப்பாற்றுங்கள் என்று  இந்த நாள்  கொண்டாடப்படும்.கவர்னர் மாளிகையில் கறுப்புக் கொடிகளைக் காட்டி, ஜனாதிபதியின் பிரதிநிதியாக இருக்கும் ஒவ்வொரு மாநிலத்தின் கவர்னர் மூலமாகவும் ஜனாதிபதிக்கு மனு  வழங்குவதன் மூலம் நாங்கள் எதிர்ப்புகளை  தெரிவிப்போம்.

இந்த  (ஜூன் 26) 1975 இல் அவசரநிலை அறிவிக்கப்பட்ட நாள், நாங்கள் எங்கள் எதிர்ப்பின் ஏழு மாதங்களை நிறைவு செய்வோம். சர்வாதிகாரத்தின் இந்த சூழலில் விவசாயத்துடன், மக்களின் ஜனநாயக உரிமைகளும் தாக்கப்பட்டுள்ளன. இது அறிவிக்கப்படாத அவசரநிலை என கூறி உள்ளார்.

Next Story