நாட்டில் இதுவரை 25 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை

நாட்டில் இதுவரை 25 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் இதுவரை 25 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான தனது போரில் முக்கிய மைல்கல்லை இந்தியா இன்று கடந்துள்ளது. இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 25 கோடிக்கும் (25,28,78,702) அதிகமான தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி உள்ளது.
மேலும், முதல் டோஸை பொருத்தவரை, 20 கோடி (20,46,01,176) என்னும் வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லை இந்தியா கடந்துள்ளது. 18-44 வயது பிரிவில் 18,45,201 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியையும், 1,12,633 பயனாளிகள் தங்களது இரண்டாவது டோஸையும் இன்று பெற்றனர். 37 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 4,00,31,646 பேர் முதல் டோஸையும், 6,74,499 நபர்கள் இரண்டாம் டோஸையும் எடுத்துக்கொண்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story