கொரோனா 3 வது அலை குழந்தைகளை பாதிக்குமா ? - ஆய்வறிக்கையில் தகவல்


கொரோனா 3 வது அலை குழந்தைகளை பாதிக்குமா ? - ஆய்வறிக்கையில் தகவல்
x
தினத்தந்தி 13 Jun 2021 6:18 PM IST (Updated: 13 Jun 2021 6:18 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என புதிய ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் 10 வயதிற்கும் குறைவான 2,500க்கும் மேற்பட்ட குழந்தைகளின் மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்து லான்செட் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இது குறித்து லான்செட் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

பெரும்பாலான குழந்தைகளுக்கு நோய் அறிகுறி இல்லாமல் இருப்பதாகவும், ஒருவேளை அறிகுறி தென்பட்டாலும் வயிற்று வலி, வாந்தி போன்ற லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை கொரோனா பாதித்த குழந்தைகளில் 2 புள்ளி 4 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 40 சதவீத குழந்தைகள் சிகிச்சைக்கு ஒத்துழைக்க முடியாத குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, மூன்றாம் அலை குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் என எங்கும் நிரூபிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளிகளை திறப்பதில் அரசுகள் அதிக கவனத்துடன் செயல்படவேண்டும் எனவும், முடிந்தளவு காணொலி வகுப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story