கொரோனா ஒழிக்கப்படவில்லை: மக்கள் முறையான அணுகுமுறையை பின்பற்ற எய்ம்ஸ் மருத்துவமனை உயரதிகாரி அறிவுறுத்தல்

கொரோனா வைரசானது ஒழிக்கப்படவில்லை என்றும் மக்கள் முறையான அணுகுமுறையை பின்பற்றவும் எய்ம்ஸ் மருத்துவமனை உயரதிகாரி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா 2வது அலையில் கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஏற்பட்ட முதல் அலையை விட அதிக பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால் நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தில் இருந்து 4 லட்சம் என்ற அளவுக்கு உயர்ந்து உச்சம் தொட்டது.
இதுதவிர, கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் உச்சமடைந்தது. இந்நிலையில், சமீப நாட்களாக கொரோனா பாதிப்புகள் நாட்டில் குறைந்து வருகின்றன. இந்நிலையில், கொரோனா வைரசானது ஒழிக்கப்படவில்லை என்றும் மக்கள் முறையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் எனவும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ துறை உயரதிகாரி டாக்டர் நவீத் விக் கூறியுள்ளார்.
அவர் கூறும்பொழுது, இந்தியாவில் 10 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்புகள் போய் விடவில்லை. ஊரடங்கு தளர்வுகள் மெல்ல நடைபெற வேண்டும். கட்டுப்பாட்டு மண்டலங்களில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
கொரோனா பாதிப்புக்கு எதிரான முறையான அணுகுமுறையை பின்பற்ற நாம் தயாராக இருக்க வேண்டும். நமக்கும், நம்முடைய குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என தனிப்பட்ட முறையில் உறுதி செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
நாம் அதனை ஒழிக்க முடியாது. அதனால், முறையான அணுகுமுறைகளை கடுமையாக நாம் பின்பற்ற வேண்டும். நம்முடைய பகுதிகளில் ஹாட்ஸ்பாட்கள் இல்லை என உறுதி செய்து கொள்வது மக்களிடமே உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story