மராட்டியம்: முதல்-மந்திரி பதவி 5 ஆண்டுகளுக்கும் சிவசேனாவிடமே இருக்கும் - சஞ்சய் ராவத்


மராட்டியம்: முதல்-மந்திரி பதவி 5 ஆண்டுகளுக்கும் சிவசேனாவிடமே இருக்கும் - சஞ்சய் ராவத்
x
தினத்தந்தி 14 Jun 2021 9:58 AM IST (Updated: 14 Jun 2021 9:58 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய முதல்-மந்திரி பதவி 5 ஆண்டுகளுக்கும் சிவசேனாவிடமே இருக்கும் என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இணைந்து மகாவிகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. 

இந்த கூட்டணி ஆட்சி மூலம் மராட்டிய மாநிலத்தின் முதல்-மந்திரியாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார். 2019-ம் ஆண்டு முதல் மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், மராட்டியத்தில் வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் அக்கட்சியின் மாநிலத்தலைவர் நானா பெட்டோலே தெரிவித்தார். 

அதேபோல், வரும் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து மகாவிகாஸ் அகாடி அரசில் உள்ள கட்சிகள் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் மந்திரி நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களின் கருத்துக்களால் மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கூட்டணியில் பிற கட்சிகளுக்கும் முதல்-மந்திரி பதவி வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் மராட்டிய முதல்-மந்திரி பதவி 5 ஆண்டுகளும் சிவசேனாவிடமே இருக்கும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மராட்டிய முதல்-மந்திரி பதவி 5 ஆண்டுகளும் முழுமையாக சிவசேனாவிடமே இருக்கும் எனவும் இதில் எந்தவித சமரசமும் கிடையாது எனவும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.



Next Story