மக்களவை லோக் ஜனசக்தி கட்சி தலைவராக பசுபதிகுமார் பராஸ் தேர்வு


மக்களவை லோக் ஜனசக்தி கட்சி தலைவராக பசுபதிகுமார் பராஸ் தேர்வு
x
தினத்தந்தி 15 Jun 2021 6:38 AM IST (Updated: 15 Jun 2021 6:55 AM IST)
t-max-icont-min-icon

மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் மகன் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி உடைந்தது.

புதுடெல்லி, 

மோடி அரசில் மத்திய மந்திரியாக இருந்த ராம்விலாஸ் பஸ்வான், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவராக இருந்தார். கடந்த ஆண்டு அவர் மறைந்ததை தொடர்ந்து, அவருடைய மகன் சிராக் பஸ்வான் தலைவராக பொறுப்பேற்றார்.

கடந்த ஆண்டு நடந்த பீகார் சட்டசபை தேர்தலில், ஆளும் ஐக்கிய ஜனதாதளத்துக்கு எதிராக லோக் ஜனசக்தி தனித்து போட்டியிட்டது. அதனால், ஐக்கிய ஜனதாதளம் ஆட்சியை பிடித்தபோதிலும், குறைவான தொகுதிகளில்தான் வெற்றி பெற்றது.

லோக் ஜனசக்தி கட்சிக்கு சிராக் பஸ்வான், பசுபதிகுமார் பராஸ், பிரின்ஸ் ராஜ், சாந்தன்சிங், வீணா தேவி, மெகபூப் அலி கைசர் ஆகிய 6 எம்.பி.க்கள் உள்ளனர். மக்களவை கட்சி தலைவராக சிராக் பஸ்வான் உள்ளார்.

இந்தநிலையில், சிராக் பஸ்வானை தனிமைப்படுத்திவிட்டு, 5 எம்.பி.க்களும் கைகோர்த்துள்ளனர். மக்களவை கட்சி தலைவராக பசுபதிகுமார் பராஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர், சிராக் பஸ்வானின் உறவினர் ஆவார். அவர் தேர்வு செய்யப்பட்ட தகவல் மக்களவை சபாநாயகருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story