தாராவியில் 2-வது நாளாக இன்றும் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று பாதிப்பு இல்லை!

தாராவியில் 2-வது நாளாக இன்றும் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மும்பை,
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவியில் கொரோனா 2-வது அலை புரட்டிப்போட்டது. ஏப்ரல் மாதம் 8-ந் தேதி அதிகப்பட்சமாக ஒரே நாளில் 99 பேர் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் மே மாத கடைசியில் தாராவியில் தொற்று பாதிப்பு குறைய தொடங்கியது. கடந்த 2 வாரமாக ஒற்றை இலக்கங்களில் தான் பாதிப்பு இருந்து வந்தது.
இந்தநிலையில் நேற்று தாராவியில் ஒருவருக்குகூட பாதிப்பு கண்டறியப்படவில்லை. கடந்த பிப்ரவரி 2-ந் தேதிக்கு பிறகு தற்போது தான் அங்கு பூஜ்ஜியம் பாதிப்பு பதிவாகி உள்ளது.
இந்நிலையில் தாராவியில் இன்றும் ஒருவருக்குகூட கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் தாராவியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 11 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story