கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்தது ஜார்க்கண்ட் அரசு

நாடு முழுவதும் இதுவரை 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராஞ்சி,
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களுக்கு அதிக அளவாக கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனையடுத்து, ராஜஸ்தான், தெலங்கானா போன்ற மாநிலங்கள் இதனை தொற்று நோயாக அறிவித்துள்ளன.
கருப்பு பூஞ்சை நோயை தமிழக அரசும் தொற்று நோயாக அறிவித்துள்ளது. இதேபோன்று ஒடிசா அரசு, கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோய்கள் சட்டம் 1897ன் கீழ் அறிவிக்கப்பட்ட ஒரு தொற்று நோயாக சேர்த்து உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கருப்புப் பூஞ்சை நோயை பேரிடர் மற்றும் பெருந்தொற்று சட்டத்தின் கீழ் ஒரு தொற்று நோயாக ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் அறிவித்து உள்ளார். இதனை முதல் மந்திரி அலுவலகம் இன்று அறிவித்து உள்ளது.
Related Tags :
Next Story