தினசரி கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் இருந்த தமிழ்நாடு 2-வது இடத்திற்கு வந்தது


தினசரி  கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் இருந்த தமிழ்நாடு 2-வது இடத்திற்கு வந்தது
x
தினத்தந்தி 16 Jun 2021 8:14 PM GMT (Updated: 2021-06-17T01:44:26+05:30)

தமிழ்நாடு 2-ம் அலையின் வீழ்ச்சிப்பாதையில் வெற்றிகரமாக பயணிக்கத்தொடங்கி இருப்பதை காட்டுகிறது.


புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் தொற்று தினசரி பாதிப்பில் கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முதல் இடத்தில் இருந்து வந்தது. ஆனால் நேற்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி தினசரி தொற்று பாதிப்பில் தமிழ்நாட்டை கேரளா விஞ்சி, முதல் இடத்துக்கு வந்துள்ளது.

இதனால் தினசரி தொற்று பாதிப்பில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு வந்து விட்டது. கேரளாவில் நேற்று 12 ஆயிரத்து 246 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இது தமிழ்நாடு 2-ம் அலையின் வீழ்ச்சிப்பாதையில் வெற்றிகரமாக பயணிக்கத்தொடங்கி இருப்பதை காட்டுகிறது.

Next Story