கொரோனா தடுப்பூசி: பா.ஜனதா சொல்லும் பொய்களும், வெற்று கோஷங்களும் தேவையில்லை - ராகுல்காந்தி

தடுப்பூசி பற்றாக்குறையை மூடி மறைக்க பா.ஜனதா சொல்லும் பொய்களும், வெற்று கோஷங்களும் தேவையில்லை என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியை அதிகரிக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கவில்லை என்று விஞ்ஞானிகள் கூறியதாக வெளியான ஒரு செய்தியை அதனுடன் இணைத்துள்ளார்.
தனது பதிவில் ராகுல்காந்தி கூறியிருப்பதாவது:-
இந்தியாவுக்கு தேவை, விரைவான, முழுமையான தடுப்பூசி போடும் பணிதான். மோடி அரசின் மெத்தனத்தால் உருவான தடுப்பூசி பற்றாக்குறையை மூடி மறைக்க பா.ஜனதா சொல்லும் பொய்களும், வெற்று கோஷங்களும் தேவையில்லை.
பிரதமரின் போலி கவுரவத்தை காப்பாற்றுவதற்காக, மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகள், கொரோனா பரவலுக்கும், உயிரிழப்புகளுக்கும் வழிவகுத்துள்ளன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story