மருத்துவம்,உடல்நலம் சார்ந்த போலி தகவல்கள் பரவுவதை தடுக்க பேஸ்புக் நடவடிக்கை

மருத்துவம்,உடல்நலம் சார்ந்த போலி தகவல்கள் பரவுவதை தடுக்க பேஸ்புக் நடவடிக்கை
x
தினத்தந்தி 17 Jun 2021 2:08 AM GMT (Updated: 2021-06-17T07:38:54+05:30)

இணையத்தில் மருத்துவம் மற்றும் உடல்நலம் சார்ந்த போலி தகவல்கள் பரவுவதை தடுக்க உண்மை கண்டறியும் அமைப்புடன் பேஸ்புக் கைகோர்த்துள்ளது.

புதுடெல்லி, 

இணையத்தில் மருத்துவம் மற்றும் உடல்நலம் சார்ந்த போலி தகவல்கள் பரவுவதை தடுக்க உண்மை கண்டறியும் அமைப்புடன் பேஸ்புக் கைகோர்த்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர் சமூகவலைதளங்களில் போலியான தகவல்கள் அதிக அளவில் பரப்பப்பட்டு வருகிறது. சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் சுமார் 1 கோடியே 80 லட்சம் போலியான தகவல்களை இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் தளங்களில் இருந்து நீக்கியது.

இதேபோல் சுமார் 16 கோடி தகவல்களை நம்பகத்தன்மையற்றது என வகைப்படுத்தியது. இந்நிலையில், மருத்துவம் சார்ந்த போலி தகவல்கள் பரவுவதை தடுக்க ’தி ஹெல்தி இந்தியன் புராஜெக்ட்’ என்ற உண்மை கண்டறியும் அமைப்புடன் பேஸ்புக் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதனால், உடல்நலன் மற்றும் மருத்துவம் சார்ந்த போலி தகவல்கள் பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story