ஊரடங்கு கட்டுப்பாடுகள்: டெல்லியில் களையிழந்த காய்கறி, பழ விற்பனை

டெல்லியில் இந்த ஆண்டு மாம்பழ சீசனில் குறைவான வாடிக்கையாளர்களே சந்தைக்கு வரும் சூழலில் பழ விற்பனை களையிழந்து காணப்படுகிறது.
புதுடெல்லி,
நாட்டின் கொரோனா 2வது அலையில் அதிக அளவு பாதிப்புகளை சந்தித்த டெல்லியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. இந்நிலையில், சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்த ஆண்டு மாம்பழ சீசன் முன்புபோல் வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்க்கவில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகள், கொரோனா பாதிப்பு ஏற்பட கூடிய அச்சம் ஆகியவற்றால் பொதுமக்கள் வெளியே செல்லாமல் முடங்கி கிடக்கும் சூழல் காணப்படுகிறது.
இதனால், காய்கறி மற்றும் பழ சந்தைகளில் பொருட்களின் விற்பனையில் மந்தநிலை காணப்படுகிறது. இதுபற்றி டெல்லியில் ஓக்லா மண்டியில் உள்ள பழ வியாபாரி முகமது யாமீன் கூறும்பொழுது, பழக்கடைகளுக்கு குறைவான வாடிக்கையாளர்களே வருகின்றனர்.
பழங்கள் பற்றாக்குறை எதுவும் இல்லை. ஆனால், பழம் வாங்க வருபவர்கள் ஊரடங்கிற்கு முன் வந்ததுபோல் அதிகம் வரவில்லை. இதனால் எங்களுடைய பழங்கள் அழுகி வருகின்றன என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story